அமைதிப் படையினருக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக் கூறலை ஊக்குவிக்கும் முயற்சியில், 40 உறுப்பினர் நாடுகளை உள்ளடக்கிய இந்தியா தலைமையிலான தோழமைக் குழு (GOF) தனது இரண்டாவது கூட்டத்தை நடத்தியது.
இந்தக் கூட்டத்தில், அமைதிப் படையினருக்கு எதிரான குற்றங்களைப் பதிவு செய்யவும் குற்றவாளிகளைப் பொறுப்புக் கூற வைப்பதில் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய தரவுத் தளத்தை (யுனைட் அவேர் பிளாட்பார்ம்) இந்தியா அறிமுகப் படுத்தியுள்ளது.
ஓர் இயங்கலை களஞ்சியமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தரவுத்தளம் ஆனது, அமைதிப் படைக்கு எதிரான தீங்கிழைக்கும் செயல்களின் வழக்குகளைக் கண்காணித்துத் தீர்வு காண்பதற்காக செயலகம் மற்றும் உறுப்பினர் நாடுகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.