முதன் முறையாக யுரேனஸின் வட துருவத்தில் ஒரு துருவச் சூறாவளி கண்டறியப் பட்டுள்ளது.
நாசா விஞ்ஞானிகள் யுரேனஸ் கிரகத்தில் இருந்து வெளியாகும் ரேடியோ அலைகளை ஆய்வு செய்வதன் மூலம் இந்தத் துருவச் சூறாவளியைக் கண்டுபிடித்துள்ளனர்.
2015, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட தரவு மூலம் கிரகங்களின் வளிமண்டலத்தைப் பற்றி ஆழமாக ஆராய விஞ்ஞானிகளுக்கு இது உதவுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் நமது சூரியக் குடும்பத்தில் வளிமண்டலங்களைக் கொண்ட அனைத்துக் கிரகங்களைப் பற்றிய ஒரு பரந்த உண்மையை உறுதிப்படுத்த முடியும்.
இதன் மூலம் கிரகங்கள், பாறையினையோ அல்லது வாயுவினையோ எதனைக் கொண்டதாக இருந்தாலும் கூட அவற்றின் வளிமண்டலங்கள் துருவப் பகுதிகளில் சுழலும் சுழலின் அறிகுறிகளைக் காட்டுகின்றது.