TNPSC Thervupettagam

யுரேனஸ் கோளின் மர்மமான காந்தப் புலம்

November 18 , 2024 9 days 86 0
  • நாசாவின் எந்திரவிய விண்கலமான வாயேஜர் 2 ஆனது 1986 ஆம் ஆண்டில் யுரேனஸ் கோளைச் சுற்றி ஐந்து நாட்கள் பறந்து ஆய்வு செய்தது.
  • வாயேஜர் 2 விண்கலத்தின் கண்காணிப்புத் தகவல்கள் ஆனது யுரேனஸின் காந்த மண்டலத்தைப் பற்றிய தவறான விளக்கத்தினை ஏற்படுத்தியது.
  • அந்தக் கோளைச் சுற்றி அக்கலம் பறக்கும் போது, அதன் காந்த மண்டலம் ஆனது பிளாஸ்மா இல்லாததாகவும் மற்றும் அதிக ஆற்றல் வாய்ந்த எலக்ட்ரான்களின் அசாதாரணச் செறிவு கொண்ட மண்டலங்களைக் கொண்டுள்ளது எனவும் கண்டு அறிந்தது.
  • ஆய்வுக் கலம் ஆனது  ஓர் அசாதாரண சூழ்நிலையில் - ஒரு தீவிர சூரியக் காற்று நிகழ்வு – அந்தக் கோளைச் சுற்றி வந்ததால் அது யுரேனஸ் மற்றும் குறிப்பாக அதன் காந்தப்புலம் பற்றிய தவறான கணிப்புகளுக்கு வழிவகுத்தது.
  • எனவே, இந்த நிகழ்வு ஆனது கலத்தின் கண்காணிப்பின் போது யுரேனஸின் காந்த மண்டலத்தைச் சுருக்கியது.
  • இங்கு பிளாஸ்மா இல்லாததால், துணைக் கோள்கள் செயலற்ற நிலையில் இருப்பதாக அறிவியலாளர்கள் நம்பினர்.
  • ஆனால் புதியக் கண்டுபிடிப்புகள் ஆனது, யுரேனஸின் ஐந்து பெரியத் துணைக் கோள்கள் புவியியல் ரீதியாகச் செயலற்றதாக இருக்காது என்று கூறுகின்றன.
  • காந்தமண்டலம் என்பது கிரகத்தின் காந்தப்புலம் ஆதிக்கம் செலுத்தும் ரீதியில் ஒரு கிரகத்தைச் சுற்றியுள்ள விண்வெளிப் பகுதியாகும்.
  • இது சூரிய மற்றும் அண்டத்துகள் கதிர்வீச்சுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குகிறது.
  • யுரேனஸ் ஆனது அதன் உள்ளே 63 பூமிகளைப் பொருத்தும் அளவுக்கு பெரியதாகும்.
  • இது பூமியை விட சுமார் 20 மடங்கு அதிகமான தொலைவில் சூரியனைச் சுற்றி வருவதோடு இது தற்போது 28 அறியப் பட்டத் துணைக் கோள்கள் மற்றும் இரண்டு வளைய அமைப்புகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்