TNPSC Thervupettagam

யுரேனஸ் மற்றும் நெப்டியூனைச் சுற்றி மூன்று புதிய துணைக்கோள்கள்

April 12 , 2024 98 days 163 0
  • நமது சூரிய குடும்பத்தில் மிக தொலைவில் உள்ள கோள்களான யுரேனஸ் மற்றும் நெப்டியூனைச் சுற்றி மூன்று புதிய துணைக்கோள்கள் இருப்பதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தக் கண்டுபிடிப்பில் யுரேனசின் சுற்றுப்பாதையில் ஒரு துணைக்கோளும் - 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட இது போன்ற முதல் கண்டுபிடிப்பு - மற்றும் நெப்டியூனின் சுற்றுப்பாதையில் இரண்டு துணைக் கோள்களும் கண்டறியப் பட்டன.
  • புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனியன் துணைக்கோள் ஆனது மிக பனி நிறைந்த இந்தப் பெருங்கோளினைச் சுற்றி வருவதாகக் கண்டறியப்பட்ட 28வது துணைக்கோள் ஆகும் என்பதோடு மேலும் இது 5 மைல்கள் (8 கிலோமீட்டர்) விட்டம் கொண்ட சிறிய துணைக்கோள் ஆகும்.
  • S/2023 U1 எனப்படும் துணைக் கோள் ஆனது, கிரகத்தை ஒரு முறை சுற்றி வர 680 பூமி நாட்கள் எடுத்துக் கொள்கிறது.
  • பிரகாசமான S/2002 N5 துணைக்கோள் ஆனது 14 மைல்கள் (23 கிலோமீட்டர்) விட்டம் கொண்டதாகும் என்பதோடு இது நெப்டியூனின் சுற்றுப் பாதையை நிறைவு செய்ய சுமார் ஒன்பது ஆண்டுகள் ஆகும்.
  • சுமார் 8.7 மைல்கள் (14 கிலோமீட்டர்) விட்டம் கொண்ட மங்கலான S/2021 N1 துணைக் கோள் ஆனது சுமார் 27 ஆண்டுகள் நீளமான சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்