பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களில் இருந்து தொடங்கிய ஐந்தாம் கட்ட யுவ சங்கம் முன்னெடுப்பின் கீழான ஒரு குழுவின் பயணம், முறையே கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேசத்தினை நோக்கித் தொடங்கியுள்ளது.
யுவ சங்கம் என்பது பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள இளையோர்களிடையே மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்திய அரசின் முதன்மையான முயற்சியாகும்.
இந்த திட்டம் ஆனது, பயன்மிகுத் தொடர்புகள், கலாச்சார ஒருங்கிணைப்பு மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றை எளிதாக்குவதன் மூலம் வேற்றுமையில் ஒற்றுமையை ஊக்குவிக்கிறது.
யுவ சங்கச் சுற்றுப்பயணங்களின் போது, பின்வரும் ஐந்து மாபெரும் பகுதிகளின் கீழ் 5Ps என்ற பர்யாதன் (சுற்றுலா), பாரம்பரா (மரபுகள்), பிரகதி (மேம்பாடு), பரஸ்பர் சம்பர்க் (மக்களுக்கிடையிலான தொடர்பு), மற்றும் ப்ரோடியோகிகி (தொழில்நுட்பம்) ஆகிய பல பரிமாணங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்.