“யுவ சஹாகர் – கூட்டுறவு நிறுவன ஆதரவு மற்றும் புத்தாக்கத் திட்டம்” என்ற திட்டம் ஆனது தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தினால் (NCDC) தற்போது செயல் படுத்தப் படுகிறது.
இது புதிய மற்றும்/அல்லது புதுமையான கருத்தாக்கங்கள் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
குறைந்தபட்சம் சுமார் 3 மாதங்களுக்கு என்று செயல்பாட்டில் உள்ள இளம் தொழில் முனைவோர்களின் கூட்டுறவுச் சங்கங்களை இத்திட்டம் ஊக்குவிக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் நீண்ட கால அவகாசம் கொண்ட கடனாகவும் (5 ஆண்டுகள் வரை) ஊக்கத்தொகையாகவும் வழங்கப்படுகிறது.
NCDC ஆனது பல திட்ட நடவடிக்கைகளுக்காக தவணை/காலநிறைவுக் கடனுக்கான அதற்கேற்ற வட்டி விகிதத்தில் 2% வட்டி மானியத்தை வழங்குகிறது.