2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பையில் சிறந்த விளையாட்டை வெளிப்படுத்தியவரும் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான யுவராஜ் சிங் சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவரான இவர் 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒரு நாள் போட்டிகள், 58 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஆகியவற்றில் விளையாடியுள்ளார்.
இவர் சவுரவ் கங்குலியின் தலைமையின் கீழ் 2000 ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
2007 ஆம் ஆண்டின் 20 ஓவர் உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் ப்ராட் வீசிய ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் அடித்ததற்காக இவர் சிறப்பாக அறியப்படுகின்றார். இவர் அப்போட்டியில் 50 ரன்களை விரைவாகக் (12 பந்துகள்) கடந்தார்.
2011 கிரிக்கெட் உலகக் கோப்பையில் இவர் தொடர் நாயகன் ஆவார்.