TNPSC Thervupettagam

யுவா – திறன் மேம்பாட்டுத் திட்டம்

August 30 , 2017 2515 days 1506 0
  • பிரதமரின் கவுஷல் விகாஸ் திட்டத்தின் கீழ் ,(Pradhan Mantri Kaushal Vikas Yojana - PMKVY) யுவா (YUVA) என்ற திட்டத்தினை டெல்லி காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தத் திட்டம் நாட்டில் உள்ள இளைஞர்கள் அவர்தம் திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் , தகுந்த வேலை வாய்ப்புகளைப் பெறவும் வழிவகை செய்கிறது.
  • நிறுவனங்களில் தேவைப்படும் வேலைவாய்ப்பு சார்ந்த திறன் பயிற்சிளை அளிக்கும் விதமாக , தேசியத் திறன் மேம்பாட்டு நிறுவனம் (National Skill Development Corporation - NSDC) மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (Confederation of Indian Industry - CII) ஆகியவற்றுடன் இணைந்து டெல்லி காவல்துறை இத்திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
  • பிரதமரின் கவுஷல் விகாஸ் திட்டம்
  • இது பலன் அடிப்படையிலான திறன் சான்றிதழ் திட்டம் (outcome based skill certification scheme) ஆகும்.
  • தேசியத் திறன் மேம்பாட்டு நிறுவனம் (National Skill Development Corporation - NSDC) இதனைச் செயல்படுத்துகிறது.
  • முன்னரே திறன்களைக் கற்றுக்கொண்ட தகுதிவாய்ந்த நபர்களுக்கு, அவர்தம் திறன்கள் மதிப்பீடு செய்யப்பட்டு ‘முன் கற்றல் அங்கீகாரச் சான்றிதழ்’ (Recognition of Prior Learning - RPL) வழங்கப்படும்.
  • திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் இத்திட்டத்தினைச் செயற்படுத்துகிறது.
  • திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாள் : 16 ஜூலை
  • திறன் பயிற்சிகள் மற்றும் மதிப்பீட்டிற்கான கட்டணங்களை அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்