யூக்ளிட் என்ற விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி பில்லியன் கணக்கான அண்டங்களை ஆய்வு செய்வதற்கு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
இந்தப் புதிய யூக்ளிட் விண்வெளி தொலைநோக்கியானது, ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9 ஏவூர்தியின் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
யூக்ளிட் என்பது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) மற்றும் யூக்ளிட் கூட்டமைப்பு நிறுவனம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட அண்மை அகச்சிவப்பு ஊடகத்திலும் செயல்படும் தொலைநோக்கி ஆகும்.
இந்தப் ஆய்வுப் பணியானது பேரண்டத்தின் முடுக்கத்தை துல்லியமாக அளவிடுவதன் மூலம் இருண்ட ஆற்றல் மற்றும் கருப்பொருள் குறித்து நன்கு அறிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.