TNPSC Thervupettagam
November 11 , 2017 2572 days 878 0
  • ஆஸ்கர் விருது பெற்ற நடிகையான நடாலி போர்ட்மேனுக்கு 2018-ஆம் ஆண்டிற்கான ஜேனிஸிஸ் பரிசு (Genesis Prize) வழங்கப்பட்டுள்ளது.
  • பாலின சமத்துவம், வறுமை ஒழிப்பு, சிறுகடனுதவி, விலங்குகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு சமூக காரணிகளில் அவர் கொண்ட அர்ப்பணிப்பு மற்றும் இஸ்ரேலிய மற்றும் யூதக் கலாச்சார வேர்களில் அவர்கொண்ட ஆழமான பிணைப்பு போன்றவற்றினை அங்கீகரிக்கும் விதத்தில் இப்பரிசு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இப்பரிசை பெறும் 5வது நபர் மற்றும் முதல் பெண்மணி நடாலி போர்ட்மேன் ஆவார்.
  • ஜேனிஸிஸ் பரிசு யூத நோபல் பரிசு எனவும் அழைக்கப்படும்.
  • 2014 ஆம் ஆண்டு ஜேனிஸிஸ் தோற்றுவிக்கப்பட்டது.
  • இஸ்ரேலிய பிரதம அலுவலகம், ஜேனிசிஸ் விருது அறக்கட்டளை, யூத நிறுவனத்தின் தலைவர் அலுவலகம் ஆகியவற்றிற்கிடையேயான கூட்டிணைவு மூலம் இப்பரிசு வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்