பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர் யூன் சுக் யியோல் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அந்நாட்டின் வரலாற்றில் ஓர் அதிபர் தடுப்புக் காவலில் வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
டிசம்பர் 03 ஆம் தேதியன்று குறுகிய கால இராணுவச் சட்டத்தினை விதித்ததற்காக அவர் மீது கிளர்ச்சியினைத் தூண்டியது தொடர்பான பல குற்றச்சாட்டுகள் வைக்கப் பட்டது.