விண்வெளியில் சோவியத்தின் முதல் நபரான சோவியத்தின் தேசிய ஹீரோவாகக் கொண்டாடப்படும் யூரி காகரின் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தார்.
சோவியத் வரலாற்றில் முதன் முறையாக அரசின் தலைவரல்லாதோருக்காக துக்கம் அனுசரிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
விண்வெளிக்கு பயணம் செய்த முதல் மனிதரான சோவியத் விண்வெளி வீரர் யூரி காகரின் 12 ஏப்ரல் 1961ல் பயணம் மேற்கொண்டார்.
காகரினின் ராக்கெட் என்பது R-7 or செம்யோர்கா என அழைக்கப்படும் ஒரு வகை ஏவுகணையை அடிப்படையாகக் கொண்டது. கிழக்கு என்று ரஷ்ய மொழியில் பொருள்படும் இந்த வோஸ்டக் விண்கலத்தை அந்த ராக்கெட் ஏந்திச் சென்றது..
காகரினின் முதல் பயணத்தின் ஆண்டு விழா விண்வெளி வீரர் தினமாக ரஷ்யாவில் விடுமுறையுடன் 12 ஏப்ரல் 1961 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
1967, ஏப்ரல் 24 அன்று சேதமடைந்த சோயூஷ் 1 ஏவுகணைத் திட்டத்தின் கமாண்டர் பொறுப்பையும் யூரி காகரின் ஏற்றார். அதைத் தொடர்ந்த ஆண்டிலேயே Mig-15 பயிற்சி விமானத்தின் பயணத்தின் போது மரணமடைந்தார்.