HURL (இந்துஸ்தான் ஊர்வாரக் & ரசாயன் லிமிடெட்) நிறுவனத்தின் வணிகப் பொருளான APNA UREA-SonaUgle ஆனது மத்திய இரசாயன மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டி வி சதானந்த கவுடா அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது.
யூரியா உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறுவதற்காக சிந்த்ரி, கோரக்பூர் மற்றும் பரௌனியில் அமைந்துள்ள மூன்று யூரியா ஆலைகளைப் புதுப்பிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தால்ச்சர் மற்றும் ராமகுண்டத்தில் உள்ள மற்ற இரண்டு பெரிய உர ஆலைகளும் மீண்டும் திறக்கப்பட உள்ளன.
யூரியாவின் ஆண்டு உற்பத்தியை ஆண்டுக்கு 63.5 லட்சம் மெட்ரிக் டன் என்னும் அளவிற்கு அதிகரிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்திய எண்ணெய் கழகம், தேசிய அனல் மின் நிறுவனம் மற்றும் இந்திய நிலக்கரி நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக HURL நிறுவனம் உள்ளது.
யூரியா உற்பத்தியில் இந்தியாவைத் தன்னிறைவு பெறச் செய்வதே HURL நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.
2015 ஆம் ஆண்டு தேசிய யூரியா கொள்கையின் படி, இந்தியா முழுவதும் 31 யூரியா உற்பத்தி ஆலைகள் உள்ளன.
இவற்றில், 28 யூரியா உற்பத்தி ஆலைகளில் இயற்கை எரிவாயு எரிபொருளாக உள்ளது.
மீதமுள்ள யூரியா ஆலைகள் நாப்தாவை எரிபொருளாகப் பயன்படுத்துகின்றன.