TNPSC Thervupettagam

யூரோட்ரோன் திட்டத்தில் இந்தியா

January 26 , 2025 11 hrs 0 min 43 0
  • இந்திய நாடானது, நடுத்தர உயர வரம்புடைய நீண்ட தாங்குதிறன் கொண்ட தொலை தூரத்தில் இருந்து இயக்கக் கூடிய விமான அமைப்பு (MALE RPAS) அல்லது யூரோட்ரோன் திட்டத்தில் ஒரு பார்வையாளர் நாடாக அதிகாரப் பூர்வமாக இணைந்துள்ளது.
  • யூரோட்ரோன் என்பது ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றை உள்ளடக்கிய நான்கு நாடுகளின் முன்னெடுப்பாகும்.
  • ஜப்பான் நாடானது, 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் முதல் அதிகாரப்பூர்வ OCCAR பார்வையாளர் நாடாக மாறியது.
  • யூரோட்ரோன் என்பது தொலைதூரத்தில் இருந்து இயக்கக் கூடிய ஆளில்லா விமான அமைப்பு (RPAS) ஆகும்.
  • இது தகவல் சேகரிப்பு, கண்காணிப்பு, இலக்கினை குறிவைத்தல் மற்றும் உளவுப் பணி (ISTAR), கடல்சார் கண்காணிப்பு, நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்த் திறன் மற்றும் வான்வழி முன் எச்சரிக்கை போன்ற நீண்ட நேரச் செயல்பாடுகள் தேவைப்படும் பல பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அதிகபட்சமாக 2.3 டன் செயல்பாட்டுச் சாதனங்கள் சுமக்கும் திறன் கொண்ட இது 40 மணி நேரம் வரை செயல்படும் திறன் கொண்டது.
  • முன்னதாக, இந்தியாவானது ரஷ்யாவின் Su-57 போர் விமானத் திட்டத்தில் இணைந்தது ஆனால் 2018 ஆம் ஆண்டில் அத்திட்டத்தில் இருந்து விலகியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்