TNPSC Thervupettagam

ரஃபா எல்லைக் கடப்புப் பகுதி – எகிப்து

November 7 , 2023 256 days 242 0
  • முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதியிலிருந்து வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் மக்களை எகிப்துக்கு அனுப்புவதற்காக காசாவிற்கும் எகிப்துக்கும் இடையிலான ரஃபா எல்லைக் கடப்பு பகுதி திறக்கப்பட்டுள்ளது.
  • ரஃபா எல்லைக் கடப்புப் பகுதியானது, காசாவை எகிப்தின் சினாய் தீபகற்பத்துடன் இணைக்கிறது.
  • காசா நிலப்பரப்பின் தெற்கு முனையில் அமைந்துள்ள இந்த எல்லையானது, இஸ்ரேல் அரசினால் கட்டுப்படுத்தப்படாத மற்றும் காசாவின் நிலைமை மோசமடைவதால் அங்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வழி வகுக்கும் ஒரே எல்லைக் கடப்புப் பகுதி ஆகும்.
  • காசாவை சினாய் பாலைவனத்திலிருந்து பிரிக்கும் 12.8 கிலோமீட்டர் நீள வேலி அமைப்பில் இந்த எல்லைக் கடப்புப் பகுதி அமைந்துள்ளது.
  • எகிப்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகியவற்றுக்கு இடையேயான ரஃபா எல்லைக் கடப்புப் பகுதியினை ஒரு சிறு பகுதியளவு திறப்பதற்கான ஒப்பந்தம் கத்தார் நாட்டின் ஈடுபாட்டினால் மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்