பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவை இணைந்து சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகன அவசர ஊர்தியைத் (ரக்சிதா) தொடங்கி வைத்துள்ளன.
இந்த இரு சக்கர வாகன அவசர ஊர்தியானது மருத்துவ அவசர நிலை நிகழ்வின் போதும் நக்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காயமடைந்த இராணுவப் படை வீரர்கள் மீதான அவசர கால மீட்புத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும் வேண்டி தொடங்கப் பட்டுள்ளது.
இந்த அவசர ஊர்திகள் ராயல் என்பீல்டு இரு சக்கர வாகனத்தில் பொருத்தப் பட்டு உள்ளன.
சிவப்புப் பெருவழிப் பாதை என்பது நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் அதிகமாக உள்ள இந்தியாவின் கிழக்கு, மத்திய மற்றும் தெற்கில் உள்ள மாநிலங்களின் சில பகுதிகளாகும்.