TNPSC Thervupettagam

ரசகுல்லா – புவிசார் குறியீடு

November 15 , 2017 2438 days 886 0
  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகமானது பாரம்பரிய இனிப்பு வகையான ரசகுல்லாவிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அதற்கான புவிசார் குறியீட்டை (geographical indication-GI) மேற்கு வங்கத்திற்கு வழங்கியுள்ளது.
  • இதற்குமுன், புவிசார் குறியீட்டைப் பெறுவதற்கு ரசகுல்லா எங்கு தோன்றியது என்பது தொடர்பாக மேற்கு வங்கம் மற்றும் ஒரிஸா மாநிலங்களுக்கிடையே இடையே போட்டி நிலவி வந்தது.
  • புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ், ரசகுல்லாவிற்கான காப்புரிமை மேற்கு வங்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதால் இப்பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
  • ரசகுல்லாவை கண்டுபிடித்தவர் நோபின் சந்திரதாஸ் ஆவார். இவர் பெங்காலின் ஓர் குறிப்பிடத்தக்க இனிப்பக விற்பன்னர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார்.
  • இதற்கு முன் இதே வருடத்தில் மேற்கு வங்கத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த பொருட்களான இரு அரிசி வகைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.அவையாவன,
    • துலாய்பஞ்சி (Tulaipanji)
    • கோவிந்தபோக் (Govindabhog)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்