இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான ரஞ்சன் கோகோய் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூலம் மாநிலங்களவைக்கு நியமிக்கப் பட்டுள்ளார்.
மாநிலங்களவையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை 250 ஆகும். அதில் 12 உறுப்பினர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை எனும் பிரிவுகள் மூலம் அந்த அவைக்கு நியமிக்கப் படுகின்றனர்.
கோகோய் இந்தியாவின் 46வது தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார்.