இந்திய நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா சமீபத்தில் காலமானார்.
டாடா அவர்கள் 2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற உயரிய குடிமை விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதினையும் மற்றும் 2008 ஆம் ஆண்டில் "பத்ம விபூஷன்" விருதினையும் பெற்றுள்ளார்.
டாடா குழுமம் என்பது நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர் மற்றும் மிகப் பெரிய தனியார் எஃகு நிறுவனம் உட்பட சுமார் 100 நிறுவனங்களின் ஒரு பரந்த தொகுப்பாகும்.
1932 ஆம் ஆண்டில் தொடங்கிய விமான சேவை நிறுவனமான டாடா நிறுவனம் ஆனது, இந்தியாவில் வணிக விமானப் போக்குவரத்திற்கு மிகவும் முன்னோடியாக திகழ்ந்தது என்பதோடு பின்னர் அது ஏர் இந்தியா நிறுவனமாக மாறியது.