TNPSC Thervupettagam

ரத்னகிரி பௌத்த அகழ்வாராய்ச்சிகள்

February 18 , 2025 4 days 57 0
  • இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) ஆனது, ஓடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ரத்னகிரி தளத்தில் மேற்கொள்ளப்படும் புதிய அகழ்வாராய்ச்சியின் போது முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த/புத்த மத எச்சங்களைக் கண்டெடுத்துள்ளது.
  • அவர்கள் மிகவும் சமீபத்தில் மூன்று பிரம்மாண்டமான புத்தர் தலைகள், ஒரு பெரிய உள்ளங்கை, ஒரு பழங்கால சுவர் மற்றும் சில கல்வெட்டுகளைக் கண்டெடுத்துள்ளனர்.
  • ASI ஆனது, ரத்னகிரி பௌத்த பாரம்பரியத் தளமானது முதன்முதலில் அகழ்வாராய்ச்சி செய்யப் பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், தற்போது அங்கு புதிய ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
  • "ரத்தின மலை" எனப் பொருள்படும் ரத்னகிரி ஆனது பிராமணி மற்றும் அதன் துணை நதியான பிருபா ஆகிய இரண்டு நதிகளுக்கு இடையே அமைந்துள்ளது.
  • உதயகிரி மற்றும் லலித்கிரி ஆகியவற்றுடன் கூடிய ஒடிசாவின் புகழ்பெற்ற ஒரு வைர முக்கோணப் பகுதியின் மூன்று முனைகளில் இதுவும் ஒன்றாகும்.
  • நரசிம்மகுப்த பாலாதித்யா (கி.பி. 495-530) என்பவரின் ஆட்சியின் போது, இந்த வைர முக்கோணப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மிகவும் ஒரு ஆரம்பகால வரலாற்றுக் கட்டமைப்புகள் கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும்.
  • ரத்னகிரி மடம்தான் இந்தியாவில் வளை கோட்டுக் கூரையுடன் கூடிய ஒரே பௌத்த மடாலயம் ஆகும்.
  • 1958 மற்றும் 1961 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட முதல் அகழ்வாராய்ச்சிகள் ஆனது பின்னாளில் இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைமை இயக்குநராக (1981-83) பணியாற்றிய டெபாலா மித்ராவால் மேற்கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்