இராஜஸ்தானின் ரந்தம்பூர் தேசியப் பூங்காவில் 25 புலிகள் "காணவில்லை" என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
ஒரு குழு அமைக்கப்பட்ட பிறகு, மூன்று நாட்களுக்குள் 10 புலிகள் கண்டுபிடிக்கப் பட்டன.
இதற்கு முன்பு 2019 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 13 புலிகள் மாயமாகி இருந்தன.
2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 88 புலிகள் இருப்பதாக மதிப்பிடப் பட்டு உள்ளதுடன், அங்கு புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரந்தம்பூர் இட நெருக்கடியினை எதிர்கொண்டு வருகிறது.