TNPSC Thervupettagam

ரபேல் ஒப்பந்தம்

December 19 , 2017 2564 days 906 0
  • 36 ரபேல் ரக போர் விமானங்களை பிரான்சு நாட்டிடம் இருந்து வாங்குவதற்கு இருநாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமானது இந்திய விமானப்படையின் முக்கியமான தேவையின் பொருட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இந்த ஒப்பந்தம் பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழுவால் (Cabinet Committee on Security - CCS) அங்கீகரிக்கப்பட்டது.
  • 2010 செப்டம்பர் மாதம், இந்தியாவும் பிரான்சும் போர் விமானங்கள், அதன் உதிரி பாகங்கள், ஆயுதங்கள் மற்றும் அதன் தொடர்புடைய கருவிகள், 10 வருடகால வருடாந்திர பராமரிப்பு போன்றவற்றிற்காக 7.87 பில்லியன் யூரோ மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • ஐரோப்பாவின் மீட்டியோர் மற்றும் மைக்கா ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரபேல் போர் விமானம் இந்தியாவின் தாக்குதல் திறனுக்கு ஒரு பெரிய உத்வேகமாக அமையும்.
  • மீட்டியோர் மற்றும் மைக்கா ஏவுகணைகளின் தாக்குதல் வரம்பு 100 கிலோ மீட்டர்கள் தொலைவை கொண்டதாகும்.
  • இவை “பார்வைக்கெட்டும் தூரத்தைத் தாண்டி தாக்கும் ஆயுதங்கள்” (Beyond Visual Range) என்ற பிரிவில் இருப்பதால் இந்த ஏவுகணைகள் ரபேல் போர் விமானத்திற்கு மிகப்பெரிய அனுகூலத்தை கொடுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்