TNPSC Thervupettagam

ரயில் தடம் புரளல் பற்றிய இந்திய ரயில்வேயின் அறிக்கை

June 8 , 2023 411 days 251 0
  • இந்தியத் தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (CAG) 2022 ஆம் ஆண்டில் இந்திய ரயில்வேயில் ரயில்கள் தடம் புரளல் என்பது குறித்த தனது அறிக்கையைச் சமர்ப்பித்து உள்ளார்.
  • மொத்தம் 422 ரயில்கள் தடம் புரண்ட சம்பவங்களுக்குப் பொறியியல் துறையே ஒரு காரணமாக உள்ளது.
  • 16 இரயில்வே மண்டலங்களில் (ZRs) ரயில்கள் தடம் புரண்ட விபத்துகள் பற்றிய 1129 ‘விசாரணை அறிக்கைகளின்’ பகுப்பாய்வின் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகள் / விபத்துகளில் ரயில்கள் தடம் புரண்டதற்குக் காரணமாக 24 காரணிகள் உள்ளதை இது வெளிப்படுத்தி உள்ளது.
  • ரயில் விபத்துகளால் ஏற்பட்ட மொத்தச் சேதம்/சொத்து இழப்பு 32.96 கோடி ருபாய் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
  • இவற்றில் 182 ரயில்கள் தடம் புரண்டதற்கு இயந்திரவியல் துறையின் பிழைகளும் 154 விபத்துகள் என்ஜின் ஓட்டுனர்களின் கவனக் குறைவுகளும் காரணமாக இருந்துள்ளது.
  • 2017-21 ஆம் ஆண்டில் 1127 ரயில்கள் தடம் புரண்டதில், சுமார் 289 தடம் புரளல்கள் (26%) ரயில்வே தடங்களைப் புதுப்பிக்காமையால் நிகழந்தவை எனவும் இந்த அறிக்கை கூறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்