மத்திய அரசானது ஒரு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கிய ரயில் மேம்பாட்டு ஆணையம் (Rail Development Authority -RDA) ஒன்றை அமைக்க அனுமதியளித்துள்ளது.
ரயில்துறை சார் சேவைகளின் விலை நிர்ணயிப்பு, வாடிக்கையாளர் நலன், வருவாய் உற்பத்தி, பிற போக்குவரத்து துறைகளுடன் போட்டியிடல் போன்றவற்றின் மீதான முடிவெடுப்புகளில் இந்திய ரயில்வே-விற்கு உதவுவதற்காக இந்த ஆணையம் அமைக்கப்பட உள்ளது.