TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 23 , 2017 2649 days 977 0
  • கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘ஹெஜ்ஜாலா’ (Hejjala) என்ற கிராமத்தில் 32 சதுர கிலோமீட்டர் பரப்பில் இந்தியாவின் முதல் ரயில்வே பேரிடர்களுக்கான மேலாண்மை மையம் (Railway Disaster management Centre) 2018ல் அமைக்கப்பட இருக்கிறது.
  • தொடர்ந்து நடைபெறும் ரயில் விபத்துக்களுக்குத் தக்க பதில் அளிக்கும் விதத்தில் மீட்புப் பணிகளின் தர மேம்பாட்டினை முடுக்கிவிடுவதற்கு இது பயன்படும்.
  • இங்கு ரயில்வே விபத்துக்களை ஆராய்வதற்கான மெய்நிகர் தோற்ற மையமும் (Virtual reality centre) ஏற்படுத்தப்பட இருக்கிறது.
  • வகுப்பறையில் மீட்புப்பணிகள் மருத்துவ உதவி வழங்கல் போன்றவற்றிற்கு அதிநவீனத் தொழில்நுட்பரீதியிலான பயிற்சிகளும் வழங்கப்பட இருக்கின்றன. இவை பல்வேறு செயல்முறை மாதிரிகள் மூலம் விளக்கப்பட இருக்கிறது.
  • ரயில்வே விபத்து தொடர்பான செயல்முறை மாதிரி வகுப்புகளும் நடத்தப்பட இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்