ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக, ஏர்-இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஸ்வனி லோஹானி நியமிக்கப்பட்டுள்ளார்.
ரயில்வே வாரியத்தின் தலைவராக இருந்த, ஏ.கே.மிட்டல் தொடர் ரயில் விபத்துகளுக்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதையடுத்து, அந்தப் பதவிக்கு அஸ்வனி லோஹானி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், இதற்கு முன்பு, இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும், ரயில் அருங்காட்சியகத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.