ரவீஷ் குமார்: வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் புதிய செய்தித் தொடர்பாளர்
July 22 , 2017 2728 days 1114 0
கோபால் பக்லேவிற்கு பதிலாக, வெளியுறவுத் துறை அமைச்சகம், ரவீஷ் குமாரை புதிய செய்தித் தொடர்பாளராக நியமித்துள்ளது.
வெளியுறவுத் துறையின் செய்தித் தெரடர்பாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, ஜெர்மனியின் பிராங்ஃபர்டிட்கான இந்தியாவின் தூதராக இருந்தவர் ரவீஷ் குமார்.
ரவீஷ்குமார்பற்றி
1971 இல் பிறந்தவர், ரவீஷ் குமார். மதுரா சாலையில் உள்ள தில்லி பப்ளிக் பள்ளியின் முன்னாள் மாணவர் ஆவார். தில்லி பல்கலைக்கழகத்தின் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்
2013 ஆம் ஆண்டு முதல் பிராங்ஃபர்டில் தூதராக பணியாற்றிய குமார், இந்தோனேசியாவின் அதிகாரப்பூர்வ மொழியான பகாசாவில் (Bahasa) புலமைப் பெற்றவர்.
இவர் இந்திய வெளியுறவுப் பணியில் 1995 இல் இணைந்தார் மற்றும் ஜகார்த்தாவில் இந்திய தூதரகத்தில் தனது பணியைத் தொடங்கினார். இதைத் தெரடர்ந்து, லண்டன் மற்றும் திம்புவில் அவர் பணியமர்த்தப்பட்டார்.