"எவிடன்ஸ்" கதிர் என்று அழைக்கப்படும் ஆரோக்கியசாமி வின்சென்ட் ராஜ், 2022 ஆம் ஆண்டு ரவுல் வாலன்பெர்க் பரிசைப் பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் உருவாக்கி அதற்குத் தலைமை தாங்கி வரும் மதுரையைச் சேர்ந்த எவிடன்ஸ் என்ற அமைப்பில் அவர் ஆற்றியப் பணிக்காக வேண்டி அவர் இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
தமிழகத்தில் உள்ள தலித் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எவிடன்ஸ் அமைப்பு செயல்படுகின்றது.
அவர்களின் பணியைப் பாராட்டி, ஐரோப்பியச் சபையானது கதிருக்கு ரவுல் வாலன்பெர்க் பரிசை வழங்கியுள்ளது.
ரவுல் வாலன்பெர்க் என்ற பரிசு ஆனது சுவீடன் அரசாங்கம் மற்றும் ஹங்கேரியப் பாராளுமன்றம் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டது.
ஹோலோகாஸ்ட் எனப்படும் இனப்படுகொலை மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது யூத உயிர்களைக் காப்பாற்ற ரவுல் வாலன்பெர்க் மேற்கொண்ட முயற்சிகளின் நினைவாக இந்த விருதானது வழங்கப்படுகிறது.