ROC என்பதன் விரிவாக்கம் Russian Olympic Committee (ரஷ்ய ஒலிம்பிக் குழு) என்பதாகும்.
இது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவிற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் ரஷ்ய தடகள வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க வழிவகுக்கும் ஒரு தீர்வாகும்.
குறிப்பு
ஊக்க மருந்து ஊழல் தொடர்பாக ஒலிம்பிக் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுப்போட்டிகளிலும் பங்கேற்பதற்கு ரஷ்யாவிற்கு நான்கு ஆண்டுகள் தடை விதித்து 2019 ஆம் ஆண்டில் உலக ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் உத்தரவிட்டது.
விளையாட்டுத் துறைக்கான நடுவண் நீதிமன்றம் இந்த தண்டனையைப் பாதியாக்கி இரண்டு வருடங்களாகக் குறைத்துள்ளதால், இந்த தடையானது 2022 ஆம் ஆண்டோடு முடிவடைகிறது.
ஆனால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா ஒரு நாடு எனும் அந்தஸ்தில் பங்கேற்க இயலாது.
எனவே ROC எனும் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
மேலும் அதனால் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய நாட்டுக் கொடியைக் காட்சிப் படுத்தவும் அந்நாட்டு தேசிய கீதத்தைப் பிரயோகிக்கவும் இயலாது.