அண்மையில் தென்கொரியாவின் பியான்சாங் நகரில் நடைபெற்று முடிந்த 2018-ஆம் ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்க தடை விதிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, தற்போது ரஷ்ய ஒலிம்பிக் சங்கத்திற்கு மீண்டும் உறுப்பினர் அந்தஸ்தை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (International Olympic Committee-IOC) வழங்கியுள்ளது.
2014ஆம் ஆண்டு இரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் போது அரசு ஆதரவுடன் இரஷ்ய வீரர்களுக்கு போதை மருந்து வழங்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதனைத் தொடர்ந்து பியான்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டது.
இரஷ்யா ஒலிம்பிக் கமிட்டிக்கு தடை விதிக்கப்பட்ட போதும், தென் கொரியாவில் நடைபெற்ற பியான்சாங் ஒலிம்பிக் போட்டியில் 168 ரஷ்ய வீரர்கள் நடுநிலை வீரர்களாக (Neutrals) ஒலிம்பிக் சங்கக் கொடியின் கீழ் போட்டிகளில் பங்கெடுத்தனர்.
இரு தங்கம் உட்பட மொத்தம் 17 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் இரஷ்யாவின் ஒலிம்பிக் தடகள வீரர்கள் (OAR - Olympic Athletes from Russia) மூன்றாவது இடத்தைப் பிடித்தனர்.
2018 ஆம் ஆண்டின் குளிர்கால பாராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கவும் இரஷ்யாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரஷ்ய வீரர்கள் நடுநிலை வீரர்களாக (Neutrals) பங்கேற்க உள்ளனர்.