TNPSC Thervupettagam

ரஷ்யா மற்றும் START அணுசக்தி ஒப்பந்தம்

March 3 , 2023 635 days 303 0
  • அமெரிக்காவுடனான புதிய START என்ற அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் தனது நாட்டின் ஈடுபாட்டினை இடை நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவர்கள் அறிவித்தார்.
  • START என்ற பெயர் "உத்திசார் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம்" என்பதைக் குறிக்கிறது.
  • இது START-I என்றும் அழைக்கப்படுகிறது.
  • 1991 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கும் முன்னாள் சோவியத் ஒன்றிய அமைப்பிற்கும் இடையில் கையெழுத்தான இது 1994 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
  • START-I ஒப்பந்தமானது, இரு நாடுகளும் நிலை நிறுத்தக் கூடிய அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் உந்துவிசை ஏவுகணைகள் (ICBMs) ஆகியவற்றின் எண்ணிக்கையில் வரம்புகளை நிர்ணயித்த நிலையில்,  அந்த இரு நாடுகளும் முறையே 6,000 மற்றும் 1,600 என்ற வரம்பில் அவற்றை நிலை நிறுத்தலாம்.
  • புதிய START ஒப்பந்தமானது, 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 05 ஆம் தேதியன்று அதிகாரப் பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
  • அமெரிக்கா மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பு ஆகியவை பின்னர் இந்த ஒப்பந்தத்தினை 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 04 ஆம் தேதி வரை நீட்டிக்க ஒப்புக் கொண்டிருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்