ரஷ்யாவின் உக்ரைன் வழியான எரிவாயு பரிமாற்றம் நிறுத்தம்
January 3 , 2025 19 days 90 0
ஐந்தாண்டு ஒப்பந்தம் தற்போது முடிவடைந்ததை யடுத்து உக்ரைன் நாடு வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் ரஷ்ய எரிவாயுப் பரிமாற்றம் ஆனது நிறுத்தப்பட்டுள்ளது
2023 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிவாயு இறக்குமதியில் ரஷ்ய எரிவாயு 10 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது, அதன் அளவு 2021 ஆம் ஆண்டில் 40% ஆக இருந்தது.
ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா மற்றும் மால்டோவா ஆகிய சில நாடுகள் மின்சார விநியோகத்திற்காக இந்தப் பரிமாற்று வழியையே சார்ந்திருந்தன.
நார்வே நாட்டிலிருந்து குழாய் வழி எரிவாயு விநியோகத்துடன், ஐரோப்பிய நாடுகள் ஆனது, கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலிலிருந்து திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவினை (LNG) வாங்கியுள்ளன.