TNPSC Thervupettagam

ரஷ்யாவின் கேஸ்புரோமிடமிருந்து மலிவான விலை திரவ இயற்கை எரிவாயு

June 12 , 2018 2232 days 617 0
  • ரஷ்யாவின் கேஸ்புரோமிடமிருந்து (Gazprom) இந்தியா இது நாள் வரையிலான தனது முதல் மலிவான திரவ இயற்கை எரிவாயுவை பெற்றிருக்கிறது.
  • இந்த LNG (Liquefied Natural Gas) சரக்கு, இந்தியாவின் பழமையான மற்றும் மிகப்பெரிய LNG வழங்குபவரான கத்தார் நாட்டிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலையை விட5 அமெரிக்க டாலர் மலிவான விலையில் ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டிற்கு (mmBtu) 7 அமெரிக்க டாலர் என்ற விலையில் வழங்கப்பட்டுள்ளது.

  • இந்த விலை ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் LNG-ஐ விட ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டிற்கு 1 முதல்5 அமெரிக்க டாலர் அளவிற்கு மலிவானதாகும்.
  • தற்சமயம் இயற்கை எரிவாயுவிற்கான தேவையில் பாதியளவிற்கு இறக்குமதி மூலம் தீர்க்கப்படுகிறது. இந்த வகையில் இந்தியா LNG இறக்குமதியில் நான்காவது மிகப்பெரிய இறக்குமதியாளராகும்.
  • இயற்கை எரிவாயு என்பது மின்சாரத் தயாரிப்பிற்கும் உரத் தயாரிப்பிற்கும் எஃகு தயாரிப்பிற்கும் உபயோகிக்கப்படும் ஒரு முக்கிய உள்ளீடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்