TNPSC Thervupettagam

ரஷ்யாவின் பான்ட்சிர் அமைப்பு

November 15 , 2024 13 days 50 0
  • மேம்படுத்தப் பட்ட பான்ட்சிர் என்ற வான்வழிப் பாதுகாப்பு எறிகணை-துப்பாக்கி அமைப்பின் பல்வேறு மாறுபாடுகளை உற்பத்தி செய்வதற்கான ஒத்துழைப்பை மேற் கொள்வதற்காக ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • இது பான்ட்சிர் மாறுபாடுகளின் உற்பத்தி, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் கூட்டு உருவாக்கத்திற்கான புதிய வழிகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பான்ட்சிர் வான்வழிப் பாதுகாப்பு அமைப்பானது வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து ராணுவ நிறுவல்கள் மற்றும் மிகவும் முக்கியமான உள்கட்டமைப்பைப் பாதுகாக்க வடிவமைக்கப் பட்டப் பல்துறை மற்றும் எளிதில் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லக் கூடிய தளமாகும்.
  • இதில் விமானம், ஆளில்லாத விமானங்கள் மற்றும் துல்லியமாக வழி காட்டப் படும் ஏவுகணைகள் ஆகியவை அடங்கும்.
  • இந்த அமைப்பு ஆனது குறுகிய தூரம் முதல் நடுத்தர தூரம் வரையிலான வரம்புடைய தரையிலிருந்து வான்வழி ரீதியில் ஏவக் கூடிய சில எறிகணைகளை 30 மில்லி மீட்டர் இரட்டை  தானியங்கி பீரங்கிகளைக் கொண்டுள்ளது.
  • 36 கிலோமீட்டர் தொலைவிலும், 15 கிலோமீட்டர் உயரத்திலும் உள்ள சில இலக்குகளை பான்ட்சிர் கண்டறிந்து எதிர் கொள்ளக் கூடிய வகையில் உள்ளது.
  • பான்ட்சிர் அமைப்பானது பல்வேறு நிலப்பரப்புகளுக்கு ஏற்ற தகவமைப்பு மற்றும் பல வான்வழி அச்சுறுத்தல்களை ஒரே நேரத்தில் எதிர்கொள்ளும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்