TNPSC Thervupettagam

ரஷ்யாவுக்கு எதிரான ‘ஆளில்லா விமானங்கள் கொண்ட கவச அமைப்பு’

May 31 , 2024 48 days 77 0
  • நேட்டோ அமைப்பின் ஆறு உறுப்பினர் நாடுகள் ரஷ்யாவின் அண்டை நாடுகளுடன் இணைந்து தங்கள் எல்லைகளைப் பாதுகாக்க "ஆளில்லா விமானங்கள் கொண்ட ஒரு கவச அமைப்பினை" கட்டமைக்கின்றன.
  • ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் பல்வேறு மேம்பட்ட கண்காணிப்பு தொழில் நுட்பங்களின் கலப்பினைப் பயன்படுத்தி இந்த கட்டமைப்பு கட்டமைக்கப்பட உள்ளது.
  • எல்லை நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக என்று இந்த ஆளில்லா விமானங்களில் பல்வேறு உணர்விகள் மற்றும் ஒளிப்படக் கருவிகள் பொருத்தப் பட்டு இருக்கும்.
  • இதில் பங்கு கொள்ளும் நாடுகள் லிதுவேனியா மற்றும் அதன் பால்டிக் அண்டை நாடுகளான லாட்வியா மற்றும் எஸ்டோனியா, அத்துடன் போலந்து, பின்லாந்து மற்றும் நார்வே ஆகியனவாகும்.
  • 2023 ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பில் இணைந்த பின்லாந்து, ரஷ்யாவுடன் 832 மைல் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்