ராஜஸ்தானின் பள்ளத்தாக்குப் பகுதி ராணி (வேலி குயின்) பாரம்பரிய இரயில் சேவை
October 10 , 2023 459 days 293 0
ஜோத்பூரில் இருந்து இயக்கப்படும் ராஜஸ்தானின் முதல் பாரம்பரிய இரயில் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இது வேலி குயின் பாரம்பரிய இரயில் என்று அழைக்கப்படுகிறது.
இது பாலி மாவட்டத்தில் உள்ள மார்வார் இரயில் சந்திப்பு மற்றும் காம்ப்ளிகாட் ஆகிய பகுதிகள் இடையே இயக்கப்படும்.
இந்தப் புதிய இரயில் சேவையானது பயணிகளுக்கு தனித்துவமான அனுபவத்தையும், ராஜஸ்தானின் இரயில்வே கட்டமைப்பின் வளமானப் பாரம்பரியம் மற்றும் முக்கிய வரலாற்றினை பற்றிய ஒரு கண்ணோட்டத்தினை வழங்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பானது பின்வரும் நான்கு இரயில் பாதைகளை உலக பாரம்பரிய தளங்களாக அறிவித்துள்ளது-
டார்ஜிலிங் இமாலய இரயில்வே (1999),
நீலகிரி மலை இரயில் (2005),
கல்கா சிம்லா இரயில்வே (2008) மற்றும்
சத்ரபதி சிவாஜி இரயில் முனையம், மும்பை (2004).
மாதேரன் லைட் இரயில்வே மற்றும் காங்க்ரா பள்ளத்தாக்கு இரயில்வே ஆகியவை அடுத்து வரவுள்ள பட்டியலில் உள்ள மற்ற இரண்டு இரயில் சேவைகள் ஆகும்.