TNPSC Thervupettagam

ராஜஸ்தானின் முதலாவது எண்ணெய் சுத்திகரிப்பாலை பார்மீர்

January 18 , 2018 2532 days 882 0
  • ராஜஸ்தானின் பார்மீரில் உள்ள பச்பத்ராவில் ஹெச்பிசிஎல் ராஜஸ்தான் சுத்திகரிப்பாலை (HPCL Rajasthan Refinery - HRRL) அமைக்கப்படுவதற்கான பணிகளை இந்தியப் பிரதமர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
  • இதுவே ராஜஸ்தானில் அமையப் பெறும் முதலாவது எண்ணெய் சுத்திகரிப்பாலை ஆகும்.
  • இத்திட்டத்தினை இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமும் (Hindustan Petroleum Corporation Ltd) ராஜஸ்தான் அரசாங்கமும் இணைந்து செயல்படுத்த உள்ளன.
  • பார்மீர் சுத்திகரிப்பாலையானது முதலாவது ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு வளாகம் ஆகும். இந்த ஆலையானது ஆரம்பம் முதலே பெட்ரோ கெமிக்கல் சேர்க்கப்பட்ட ஒன்றாக இருக்கப் போகிறது. பொதுவாக பெட்ரோ கெமிக்கல்களை கடைசியாகத் தான் சேர்ப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்