TNPSC Thervupettagam

ராஜஸ்தானில் புதிய வனவிலங்கு வளங்காப்பகங்கள்

May 2 , 2023 445 days 295 0
  • ராஜஸ்தான் மாநில வனத்துறையானது, ராஜஸ்தானின் அரிய மற்றும் அருகி வரும் நிலையிலுள்ள வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக வேண்டி மூன்று புதிய  வளங் காப்பகங்களை அறிவித்துள்ளது.
  • பாரனில் உள்ள சோர்சன், ஜோத்பூரில் உள்ள கிச்சான் மற்றும் பில்வாராவில் உள்ள ஹமிர்கர் ஆகியவை இந்தப் புதிதாக அறிவிக்கப்பட்ட மூன்று புதிய வனவிலங்கு வளங் காப்பகங்கள் ஆகும்.
  • பாரனில் உள்ள சோர்சன் பகுதியின் புல்வெளிகள் கான மயில்களுக்குப் பாதுகாப்பான இடமாக இருக்கும்.
  • ஜோத்பூரில் உள்ள கிச்சான் என்பது, ஆயிரக்கணக்கான வலசை செல்லும் நெட்டை கொக்குகளுக்குப் புகலிடம் வழங்குகிறது.
  • கிச்சான் நெட்டை கொக்குகளுக்கான இந்தியாவின் முதல் வளங்காப்பகமாகும்.
  • புதிதாக அறிவிக்கப்பட்ட இந்த மூன்று வனவிலங்கு வளங்காப்பகங்களுடன், தற்போது 26 வனவிலங்கு வளங்காப்பகங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்