TNPSC Thervupettagam

ராஜஸ்தான் கட்டாய திருமணப் பதிவு (திருத்தம்) மசோதா, 2021

September 23 , 2021 1067 days 506 0
  • முதல்வர் அசோக் கெஹ்லாட் அவர்களின் அரசானது 2009 ஆம் ஆண்டு சட்டத்தைத் திருத்துவதற்காக 2021 ஆம் ஆண்டு ராஜஸ்தான் கட்டாய திருமணப் பதிவு (திருத்தம்) என்ற ஒரு மசோதாவினை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியுள்ளது.
  • ராஜஸ்தானின் இந்தப் புதிய திருமண மசோதாவானது மணமகனும் மணமகளும் 30 நாட்களுக்கும் மேலாக தாம் வசிக்கும் இடத்திலுள்ள திருமணப் பதிவு அதிகாரியிடம் தங்களது திருமணப் பதிவிற்காக விண்ணப்பிக்கலாம் எனக் கூறுகிறது.
  • 21 வயது பூர்த்தியடையாத மணமகனுக்கும் 18 வயது பூர்த்தியடையாத மண மகளுக்கும் நடைபெற்ற திருமணத்தை, திருமணமான 30 நாட்களுக்குள் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்