1949 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் தேதியன்று ஜோத்பூர், ஜெய்ப்பூர், ஜெய்சால்மர் மற்றும் பிகானிர் ஆகிய சில சமஸ்தானங்கள் ஒன்றிணைக்கப்பட்டு 'மாபெரும் ராஜஸ்தான் ஒன்றியம்' ஆக மாறியது.
1949 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதியன்று மத்ஸ்ய ஒன்றியமானது மாபெரும் ராஜஸ்தான் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டு ஒற்றை மற்றும் ஒருங்கிணைந்த ராஜஸ்தான் மாநிலத்தினை உருவாக்கியது.
1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று மாநில மறுசீரமைப்புச் சட்டமானது ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சில சிறிய மாற்றங்களைக் கொண்டு வந்தது.