TNPSC Thervupettagam

ராஜஸ்தான் - நீர் வளத் தரவுக் கட்டுப்பாட்டகம்

March 29 , 2024 271 days 390 0
  • முதன்முதலாக நீர் வளத்திற்காக என்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இணைய தளமானது ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் உள்ள நீர்மட்டம் மற்றும் ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள கால்வாய்களில் உள்ள நீரின் அளவு பற்றிய நிகழ்நேரத் தகவல்களை வழங்கும்.
  • இந்த இணைய தளம் ஆனது திறன்மிகு நீர் மேலாண்மைக்கு உதவுவதோடு, வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவை குறித்து கணிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • நீர் இருப்பு பற்றியத் தகவல்களைப் ஒரு பொதுவான தளத்தில் கொண்டு வரும் ஓர் அமைப்பினை உருவாக்கிய முதல் மாநிலம் ராஜஸ்தான் ஆகும்.
  • இந்த இணைய தளமானது, 805 அணைகளின் முழுத் தரவுகளையும், 242 அணைகளின் தினசரித் தரவுகளையும், 88 அணைகளின் நேரடித் தரவுகளையும் வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்