சமீபத்தில் முடிவடைந்த 2023 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முழுவதும் இருந்து 11,000 விளையாட்டு வீரர்கள் 45 வெவ்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.
மகாராஷ்டிரா அணி 80 தங்கம், 69 வெள்ளி, 79 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 228 பதக்கங்களை வென்றது.
இந்திய ஆயதப் படைகளால் நிர்வகிக்கப் படும் SSCB அணி (Services Sports Control Board – விளையாட்டுச் சேவை கட்டுப்பாட்டு மன்றம்) 66 தங்கம், 27 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
ஹரியானா அணி 62 தங்கம், 54 வெள்ளி மற்றும் 73 வெண்கலப் பதக்கத்துடன் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மகாராஷ்டிரா அணியானது, ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்று 1994 ஆம் ஆண்டிலிருந்து முதன்முறையாக மதிப்புமிக்க ராஜா பாலிந்திர சிங் ரோலிங் கோப்பையினை வென்றது.