இந்தியாவின் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பான, ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு புலனாய்வுப் பிரிவின் (RAW - Research and Analysis Wing- ரா) முன்னாள் தலைவரான ராஜிந்தர் கண்ணா புதிய துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக (deputy National Security Advisor) நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜிந்தர் கண்ணா 1978-ல் “ரா” பிரிவில் இணைந்தார்,
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு புலனாய்வுப் பணிச்சேவைப் பிரிவின் தலைவராக நேரடியாக நியமிக்கப்பட்ட முதல் தலைவர் இவரேயாவார்.
துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எனும் வகையில், இவர் யுரேஸியா (ஐரோப்பா + ஆசியா), அரபு நாடுகள், தென்கிழக்காசிய நாடுகள் போன்றவற்றுடனான இந்தியாவின் பாதுகாப்புசார் பேச்சுவார்த்தைகளை முன்னின்று வழிநடத்துவார்.
பிரதமர் தலைமையிலான மத்திய நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு இவருடைய நியமனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.