TNPSC Thervupettagam

ராஜீவ் குமார்– நிதி ஆயோக்கின் புதிய துணைத் தலைவர்

August 6 , 2017 2716 days 1170 0
  • பொருளாதார நிபுணர் டாக்டர் ராஜீவ் குமார் அவர்கள் , நிதி ஆயோக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இதற்கு முன்னர் இப்பதவியில் இருந்த அர்விந்த் பனகாரியா , பதவியில் இருந்து விலகி கல்விப் பணிகளுக்குத் திரும்பப் போவதாக அறிவித்துள்ளார் .
  • ராஜீவ் குமார் , 2006 முதல் 2008 வரை தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் குழுவின் (National Security Advisory Board ) உறுப்பினராக இருந்தார். அவர் இந்தியத் தொழிலதிபர்கள் கூட்டமைப்பில் (Confederation of Indian Industries - CII) முக்கியப் பொருளாதார நிபுணராகவும் பணியாற்றியுள்ளார்.
  • ஆசிய வளர்ச்சி வங்கி , இந்தியத் தொழில்துறை அமைச்சகம் , மத்திய நிதி அமைச்சகம் போன்றவற்றில் முக்கியப் பதவிகளையும் வகித்துள்ளார்.
  • ராஜீவ் குமார் பல தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார் . அவற்றுள் சில ,
    • மன்னர் அப்துல்லா பெட்ரோலியம் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி மையம், ரியாத் ( சவுதி அரேபியா) / King Abdullah Petroleum Studies and Research Center, Riyadh
    • ஆசியான் கூட்டமைப்பின் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம்
    • பாரத ஸ்டேட் வங்கி
    • இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் (Indian Institute of Foreign Trade)
  • அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில், குழந்தைகள் நல மருத்துவராக உள்ள டாக்டர் வினோத் பால் அவர்களும் நிதி ஆயோக் குழுவின் ஒரு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்