ராஜோரி மாவட்டத்தின் விடுதலைக்காக தங்கள் உயிரினை தியாகம் செய்த படை வீரர்களின் துணிச்சலையும் வீரத்தினையும் நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 13 ஆம் நாள் ராஜோரி தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டப் பிறகு மேற்கு மாவட்டப் பகுதிகளிலிருந்து கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து பாகிஸ்தானானது படையெடுத்து 1947 ஆம் ஆண்டு நவம்பர் 07 அன்று ராஜோரி மாவட்டத்தினைக் கைப்பற்றியது.
எல்லைப் பகுதியிலிருந்து ஊடுருவிய கிளர்ச்சியாளர்கள் மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தினரிடமிருந்து 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 அன்று ராஜோரி மீண்டும் கைப்பற்றப்பட்டது.