TNPSC Thervupettagam

ராஜ்ய சபா-வழிநடத்துதல் குழு

March 10 , 2018 2454 days 818 0
  • ராஜ்ய சபாவின் அன்றாட அலுவல்களை வழி நடத்துவதற்கு ஏற்படுத்தப்படும் வழிநடத்துதல் குழுவிற்கு (presiding officers) பீஹாரைச் சேர்ந்த ஜனதா தள மாநிலங்களவை உறுப்பினர் காகஷான் பர்வீனை மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு நியமித்துள்ளார்.
  • அண்மைய காலத்தில், இக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் இவரேயாவார்.
  • மாநிலங்களவை விதிகளின் படி, மாநிலங்களவைத் தலைவர் அல்லது மாநிலங்களவைத் துணைத் தலைவர் இல்லாத காலங்களில் அவைக்குத் தலைமை வகிக்க மாநிலங்களவை உறுப்பினர்களிலிருந்து 6 துணைத் தலைவர்கள் அல்லது தலைமையேற்பாளர்கள் கொண்ட வழிநடத்துதல்  குழுவை    மாநிலங்களவைத் தலைவர் நியமிக்க வேண்டும்.
  • சத்ய நாராயண ஜதியா (பா.ஜ.க), திருச்சி சிவா (தி.மு.க), T.K. ரங்கராஜன் (CPM), புவனேஷ்வர் கலிட்டா (காங்கிரஸ்), பசவராஜ் பாட்டில் (பாஜக), சுகேந்து சேகர்ராய் (TMC) ஆகிய  6 பேர்  தற்போது  வழிநடத்துதல்   குழுவில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்