ரான் உத்சவ் நிகழ்ச்சியானது, இரண்டு நாட்கள் அளவிலான திருவிழாவாக தொடங்கி, உள்ளூர் கலை மற்றும் கலாச்சாரத்தின் புகழ்பெற்ற 100 நாட்கள் அளவிலான ஒரு கொண்டாட்டமாக உருப்பெற்றது.
ரான் ஆஃப் கட்ச் என்பது உலகின் இரண்டாவது பெரிய உவர் மண் கொண்ட சதுப்பு நிலம் (7,500 சதுர கிலோமீட்டர்கள்) ஆகும் என்பதோடு அதன் கரடுமுரடான உப்புப் படலமானது வறண்ட பாலைவனத்தினை ஒரு வெண்மையான படலமாக தோன்றச் செய்கிறது.
இந்தத் திருவிழா கச் பகுதியின் வளமான கலாச்சார மற்றும் கலைப் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதால், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.