TNPSC Thervupettagam

ரான்சம்வேரினால் பில்லியன் டாலர்கள் இழப்பு

July 16 , 2019 1865 days 638 0
  • சர்வதேச இணையதள சமூகத்தின் நிகழ்நேர அறக்கட்டளைக் கூட்டிணைவினால் தொகுக்கப்பட்டத் தரவின்படி, சர்வதேச அளவில் கடந்த ஆண்டில் ரான்சம்வேரினால் 60% இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதன் மதிப்பு 8 பில்லியன் டாலர்கள் ஆகும்.
  • “வானாக்ரை” மற்றும் “நாட்பெட்டையா” ஆகியவை சமீபத்தில் ஏற்பட்ட இரண்டு மிகவும் ஆபத்தான ரான்சம்வேர்களாகும்.
அதுபற்றி
  • ரான்சம்வேர் (தரவுகளை முடக்கிப் பணம் கோருவது) என்பது கணினி அமைப்புக்குள்ளேயே முக்கியமான கோப்புகள் மற்றும் ஆவணங்களை அணுக மறுக்கும் ஒரு வகையான மால்வேராகும் (தரவுகளைத் திருடுவது).
  • இது கணினிக்குள்ளே இருக்கும் ஆவணங்கள் மற்றும் கோப்புகளை அணுகப் பயனாளிகளிடம் பிணைத் தொகையைக் கேட்கும்.
  • கணினிகள் காலாவதியான அல்லது சிதைந்த மென்பொருளை எதிர்கொள்ளும்போது ரான்சம்வேர் எளிதில் பரவுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்