TNPSC Thervupettagam
May 8 , 2019 1909 days 643 0
  • தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிக்கையாளரான D. ராபர்ட் கோவென்டர், ஐக்கிய இராஜ்ஜியத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான V.K. கிருஷ்ண மேனன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • காலனிய எதிர்ப்பு பத்திரிக்கைத் துறையின் முன்னோடியாக இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இவர் இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  • ராபர்ட் கோவென்டர் 1930 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார்.
  • தென் ஆப்பிரிக்காவில் “வெள்ளையர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விளையாட்டு அணிகளின்” புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்த முதல் பத்திரிக்கையாளர் இவராவார்.
V.K. கிருஷ்ண மேனன்
  • பிரிட்டனுக்கான இந்தியாவின் முதலாவது உயர் ஆணையர் K. கிருஷ்ண மேனன் ஆவார்.
  • இவர் 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 1962 ஆம் ஆண்டு அக்டோபர் வரை இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகப் பணியாற்றினார்.
  • இவர் ஐ.நா. பாதுகாப்பு ஆணையத்தில் (UNSC - UN Security Council) மிக நீண்ட நேரம் (8 மணி நேரங்கள்) உரையாற்றிச் சாதனை படைத்தார்.
  • இவர் 1957 ஆம் ஆண்டில் தனது UNSC உரையில் காஷ்மீர் மீதான இந்தியாவின் இறையாண்மை குறித்து விவாதித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்