ராபி மற்றும் காரிஃப் பயிர்களின் 2வது முன்கூட்டிய மதிப்பீடுகள்
March 15 , 2025 26 days 69 0
2024-25 ஆம் ஆண்டிற்கான முக்கிய வேளாண் பயிர்களின் (காரிஃப் மற்றும் ராபி) உற்பத்தியின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடுகள் ஆனது மத்திய வேளாண்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
நாட்டில் காரிஃப் பருவ உணவு தானிய உற்பத்தியானது, 1,663.91 லட்சம் மெட்ரிக் டன் (LMT) ஆகவும் மற்றும் ராபி பருவ உணவு தானிய உற்பத்தி ஆனது 1,645.27 LMT ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
காரீஃப் பருவத்தில் அரிசி உற்பத்தி ஆனது, 1,206.79 LMT ஆக மதிப்பிடப் பட்டுள்ளது என்ற நிலையில் இது 2023-24 ஆம் ஆண்டில் 1,132.59 LMT ஆக இருந்தது.
ராபி பருவத்தில், அரிசி உற்பத்தியானது 1,57.58 LMT ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
கோதுமை உற்பத்தியானது, 1,154.30 LMT ஆக மதிப்பிடப்பட்டுள்ளது என்ற நிலையில் இது முந்தைய ஆண்டின் 1,132.92 LMT உற்பத்தியுடன் ஒப்பிடும் போது 21.38 LMT அதிகம் ஆகும்.